சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
75   திருச்செந்தூர் திருப்புகழ் ( குருஜி இராகவன் # 39 - வாரியார் # 52 )  

பஞ்ச பாதகம்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தந்த தானன தனதன தனதன
     தந்த தானன தனதன தனதன
          தந்த தானன தனதன தனதன ...... தனதான

பஞ்ச பாதக முறுபிறை யெயிறெரி
     குஞ்சி கூர்விட மதர்விழி பிலவக
          பங்க வாண்முக முடுகிய நெடுகிய ...... திரிசூலம்
பந்த பாசமு மருவிய கரதல
     மிஞ்சி நீடிய கருமுகி லுருவொடு
          பண்பி லாதொரு பகடது முதுகினில் ...... யமராஜன்
அஞ்ச வேவரு மவதர மதிலொரு
     தஞ்ச மாகிய வழிவழி யருள்பெறும்
          அன்பி னாலுன தடிபுக ழடிமையெ ...... னெதிரேநீ
அண்ட கோளகை வெடிபட இடிபட
     எண்டி சாமுக மடமட நடமிடும்
          அந்த மோகர மயிலினி லியலுடன் ...... வரவேணும்
மஞ்சு போல்வள ரளகமு மிளகிய
     ரஞ்சி தாம்ருத வசனமு நிலவென
          வந்த தூயவெண் முறுவலு மிருகுழை ...... யளவோடும்
மன்றல் வாரிச நயனமு மழகிய
     குன்ற வாணர்த மடமகள் தடமுலை
          மந்த ராசல மிசைதுயி லழகிய ...... மணவாளா
செஞ்சொல் மாதிசை வடதிசை குடதிசை
     விஞ்சு கீழ்திசை சகலமு மிகல்செய்து
          திங்கள் வேணியர் பலதளி தொழுதுயர் ...... மகமேரு
செண்டு மோதின ரரசரு ளதிபதி
     தொண்ட ராதியும் வழிவழி நெறிபெறு
          செந்தில் மாநக ரினிதுறை யமரர்கள் ...... பெருமாளே.
Easy Version:
பஞ்ச பாதகம் உறு
பிறை எயிறு
எரி குஞ்சி
கூர் விட(ம்) மதர் விழி
பிலவக பங்க வாள் முகம்
முடுகிய நெடுகிய திரிசூலம்
பந்த பாசமும் மருவிய கர தலம்
மிஞ்சி நீடிய கரு முகில் உருவொடு
பண்பிலாத ஒரு பகடு அது முதுகினில் யம ராஜன்
அஞ்சவே வரும் அவதரம் அதில்
ஒரு தஞ்சம் ஆகிய வழிவழி அருள்பெறும்
அன்பினால் உனது அடி புகழ அடிமை என் எதிரே நீ
அண்ட கோளகை வெடிபட இடிபட
எண் திசா முகம் மடமட நடம் இடும்
அந்த மோகர மயிலினில் இயலுடன் வரவேணும்
மஞ்சு போல் வளர் அளகமும்
இளகிய ரஞ்சித அம்ருத வசனமும்
நிலவு என வந்த தூய வெண் முறுவலும்
இருகுழை அளவோடும் மன்றல் வாரிச நயனமும்
அழகிய குன்ற வாழ்நர் தம் மடமகள்
தடமுலை மந்தர அசல மிசை துயில் அழகிய மணவாளா
செம் சொல் மா திசை வட திசை குட திசை
விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து
திங்கள் வேணியர் பல தளி தொழுது
உயர் மக மேரு செண்டு மோதினர் அரசருள் அதிபதி
தொண்டர் ஆதியும் வழிவழி நெறி பெறு
செந்தில் மா நகரில் இனிது உறை அமரர்கள் பெருமாளே.
Add (additional) Audio/Video Link

பஞ்ச பாதகம் உறு ... ஐந்து பாதகமும் செய்பவரைத் தாக்கும் (யமன்),
பிறை எயிறு ... பிறைச் சந்திரன் போல் (வெளுப்பும், வளைவும்) உள்ள
பற்களுடன்,
எரி குஞ்சி ... நெருப்புப் போன்ற தலை மயிருடன்,
கூர் விட(ம்) மதர் விழி ... கொடிய விஷம் ததும்பும் கண்களுடன்,
பிலவக பங்க வாள் முகம் ... குரங்கைப் போன்ற பயங்கர
ஒளிகொண்ட முகத்துடன்,
முடுகிய நெடுகிய திரிசூலம் ... விரைந்து செல்ல வல்ல நீண்ட
திரிசூலத்துடன்,
பந்த பாசமும் மருவிய கர தலம் ... கட்டுவதற்கான பாசக்கயிற்றைக்
கொண்டுள்ள கையினனாக,
மிஞ்சி நீடிய கரு முகில் உருவொடு ... மிகுத்து நீண்ட கரிய மேகம்
போன்ற உருவத்துடன்
பண்பிலாத ஒரு பகடு அது முதுகினில் யம ராஜன் ... அழகு
இல்லாத ஓர் எருமையின் முதுகில் ஏறி வருகின்ற யமராஜன்
அஞ்சவே வரும் அவதரம் அதில் ... யான் பயப்படும்படியாக
வருகின்ற அந்தச் சமயத்தில்
ஒரு தஞ்சம் ஆகிய வழிவழி அருள்பெறும் ... ஒப்பற்ற
அடைக்கலமாய் தலைமுறை தலைமுறையாக உனது திருவருளைப்
பெற விரும்பும்
அன்பினால் உனது அடி புகழ அடிமை என் எதிரே நீ ... அன்பு
கொண்டு உன் திருவடியைப் புகழும் அடிமையாகிய என் எதிரே நீ,
அண்ட கோளகை வெடிபட இடிபட ... அண்ட முகடு வெடி
படவும், இடி படவும்,
எண் திசா முகம் மடமட நடம் இடும் ... எட்டுத் திக்குக்களும்
மடமட என்று முறியும்படியாகவும் நடனம் செய்யும்
அந்த மோகர மயிலினில் இயலுடன் வரவேணும் ... அந்த
உக்கிரமான மயிலின் மேல் ஏறி அன்புடன் வரவேண்டும்.
மஞ்சு போல் வளர் அளகமும் ... (கரிய) மேகம்போல் வளர்ந்துள்ள
கூந்தலும்,
இளகிய ரஞ்சித அம்ருத வசனமும் ... மெல்லிய இன்பகரமான
அமிர்தம் போன்ற பேச்சும்,
நிலவு என வந்த தூய வெண் முறுவலும் ... நிலவைப் போல்
விளங்கும் பரிசுத்த வெண்மையான பற்களும்,
இருகுழை அளவோடும் மன்றல் வாரிச நயனமும் ...
இருசெவிகளின் அளவும் ஓடுகின்ற நறு மணம் உள்ள தாமரை
போன்ற கண்களும் உடையவளாக
அழகிய குன்ற வாழ்நர் தம் மடமகள் ... அழகுள்ள குன்றில் வாழும்
வேடர்களின் இளம்பெண் வள்ளியின்
தடமுலை மந்தர அசல மிசை துயில் அழகிய மணவாளா ...
பருத்த மார்பகங்களாகிய மந்தர மலை மீது தூங்கும் அழகிய கணவனே,
செம் சொல் மா திசை வட திசை குட திசை ... தமிழ் மொழி
விளங்கும் சிறந்த தெற்கு திசை, வடதிசை, மேற்கு திசை,
விஞ்சு கீழ் திசை சகலமும் இகல் செய்து ... மேலான கிழக்கு
திசை முதலிய திக்குகள் எல்லாவற்றிலும் போர் செய்து,
திங்கள் வேணியர் பல தளி தொழுது ... நிலவை அணிந்த சடை
முடியராகிய சிவபெருமானுடைய பல கோயில்களையும் தொழுது,
உயர் மக மேரு செண்டு மோதினர் அரசருள் அதிபதி ...
உயர்ந்த பெரிய மேரு மலையின் மீது செண்டை எறிந்த சக்கரவர்த்தியே,
தொண்டர் ஆதியும் வழிவழி நெறி பெறு ... தொண்டர்
முதலானோர் வழிவழி அடிமையாக இருந்து முத்தி பெற அருளிய
செந்தில் மா நகரில் இனிது உறை அமரர்கள் பெருமாளே. ...
திருச்செந்தூரில் இனிது வீற்றிருக்கும் தேவர்கள் பெருமாளே.

Similar songs:

75 - பஞ்ச பாதகம் (திருச்செந்தூர்)

தந்த தானன தனதன தனதன
     தந்த தானன தனதன தனதன
          தந்த தானன தனதன தனதன ...... தனதான

769 - கொங்கு லாவிய (சீகாழி)

தந்த தானன தனதன தனதன
     தந்த தானன தனதன தனதன
          தந்த தானன தனதன தனதன ...... தனதான

Songs from this thalam திருச்செந்தூர்

764 - அலைகடல் சிலை

765 - இரதமான தேன்

766 - ஊனத்தசை தோல்கள்

767 - ஒய்யா ரச்சிலை

768 - கட்காமக்ரோத

769 - கொங்கு லாவிய

770 - சந்தனம் பரிமள

771 - சருவி இகழ்ந்து

772 - சிந்து உற்று எழு

773 - செக்கர்வானப் பிறை

774 - தினமணி சார்ங்க

775 - பூமாது உரமேயணி

776 - மதனச்சொற் கார

777 - விடம் என மிகுத்த

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
 


1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song